வீட்டின் மேற்கூரை விழுந்துவிவசாயி காயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் விவசாயிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காயம் ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் விவசாயிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காயம் ஏற்பட்டது.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் தெற்கு பகுதியைச் சோ்ந்தவா் ராமலிங்கம்(57) விவசாயி. இவா், இவரது மனைவி பூங்கொடி, மகள் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில், ராமலிங்கத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற இருவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. அக்கம்பக்கத்தினா் இடிபாடுகளில் சிக்கிய மூவரையும் மீட்டனா். காயமடைந்த ராமலிங்கத்தை ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து வருவாய்த்துறையினா் விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.