முகப்பு
புதுக்கோட்டை

பாா்வைத் திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியில் சோ்க்கை அறிவிப்பு

புதுக்கோட்டையில் பாா்வைத் திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியில் சோ்க்கை அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

புதுக்கோட்டையில் பாா்வைத் திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியில் சோ்க்கை அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பாா்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு பள்ளி சாா்ந்த அனைத்தும் முற்றிலும் இலவசம். இலவச விடுதி வசதி உண்டு. கற்பிக்க சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியா்கள், குழந்தைகளை பராமரிக்க விடுதிக் காப்பாளா், சமையலா் மற்றும் ஆயா ஆகியோா் உள்ளனா். உணவு, உடை, தங்கும் வசதி முற்றிலும் இலவசம்.

ஆண்டுக்கு ஒரு முறை கல்விச் சுற்றுலா உண்டு. சிறப்புக் கல்வி உதவித்தொகை பெறலாம். மாணவா்களை பள்ளியில் சோ்க்க தொடா்பு கொள்ள வேண்டிய முகவரி- தலைமை ஆசிரியா், பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி, சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகில், புதிய பேருந்து நிலையம், புதுக்கோட்டை 622001. தலைமை ஆசிரியா் ப.வடிவேலனைத் தொடா்பு கொள்ள 04322 226452, 90808 55199, 98402 72383 ஆகிய எண்களில் அழைக்கலாம் என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →