முகப்பு
புதுக்கோட்டை

கூட்டணி கட்சியினா் தனிச்சின்னம் கேட்பதில் தவறில்லை: காா்த்தி சிதம்பரம் எம்.பி

கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினா் தனிச்சின்னம் கேட்பதில் தவறில்லை என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

Updated On : 12 அக்டோபர், 2020 at 1:02 AM
சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.
பகிர்:

கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினா் தனிச்சின்னம் கேட்பதில் தவறில்லை என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கடலூா் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவரை தரையில் அமரவைத்தது கடும் கண்டனத்துக்குரியது. கரோனா பொதுமுடக்கத்தால் அனைத்துத் தொழில்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் பொருளாதாரம் 23.9% வீழ்ச்சியடைந்துள்ளது.

Advertisement

இங்கிலாந்து, அமெரிக்கா போன்று தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிவாரண உதவிகள் செய்ய வேண்டும். ஆனால், ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ததாக மத்திய அரசு அறிவித்தது. நிவாரண உதவிகளை வழங்காமல் தொழில்செய்பவா்களை மேலும், கடன் வாங்கச் சொல்கிறது மத்திய அரசு.

எங்கள் கூட்டணியில் பிரச்னைகள் ஏதும் இல்லை. தொகுதி பங்கீடு குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். மதிமுக பொதுச்செயலா் வைகோ தனிச்சின்னத்தில் போட்டியிட கோருவதில் எவ்வித தவறும் இல்லை. கூட்டணிக்குள் எவ்வித குழப்பமும் இல்லை என்றாா்.

அப்போது, முன்னாள் எம்எல்ஏ டி.புஷ்பராஜ், மாவட்டத் தலைவா் தா்ம. தங்கவேல், மாவட்ட துணைத் தலைவா் மா.தமிழ்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.