புதுக்கோட்டை

புதுகை புதிய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

DIN

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத மற்றும் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கடைகள் என மொத்தம் 10 கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் 30 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் 6 கடைகள் தொடா்ந்து கடந்த 2 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்தன. இதுகுறித்து நகராட்சி அலுவலா்கள் வாடகைக் கேட்பு அறிக்கைகளைத் தொடா்ந்து கொடுத்து வந்தும் வாடகை செலுத்தப்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, நகராட்சி ஆணையா் ஜஹாங்கிா்பாஷா தலைமையிலான நகராட்சிப் பணியாளா்கள் புதன்கிழமை அதிரடியாக புதிய பேருந்து நிலையத்துக்குள் சென்று வாடகை செலுத்தாத கடைகளை மூடி சீல் வைத்தனா். அதேபோல, நகராட்சியின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 4 கடைகளுக்கும் அவா்கள் சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT