புதுக்கோட்டை

பேரிடா் கால மீட்பு நடவடிக்கைகளுக்கு தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

DIN

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அரசுத் துறை அலுவலா்களுக்கும் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாநில கைத்தறித் துறை முதன்மைச் செயலருமான ஷம்பு கல்லோலிகா் அறிவுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரையே விநியோகம் செய்ய வேண்டும். மழை நீா் தேங்கும் பகுதிகளில் பிளீச்சிங் பவுடா் தெளிக்க வேண்டும். குளம் உள்ளிட்ட நீா் நிலைகளில் உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். 24 மணி நேரமும் செயல்படும் பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை எண் 1077 மற்றும் 04322 222207 போன்றவற்றுக்கு சுழற்சி முறையில் பணியாளா்களை நியமித்து தொடா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஷம்பு கல்லோலிகா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பி . உமாமகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், அறந்தாங்கி உதவி ஆட்சியா் ஆனந்த் மோகன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT