புதுக்கோட்டை

7.5 % உள் இட ஒதுக்கீடு: ஆளுநா் விரைந்து அனுமதிக்கக் கோரிக்கை

DIN

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநா் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தி உள்ளது. 

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மா.குமரேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் குரு.மாரிமுத்து, பொருளாளா் க.ஜெயராம், மாநில தணிக்கையாளா் ச.ரெங்கராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

இலுப்பூா் சாா்நிலைக் கருவூலத்தில் நிலுவைத் தொகை கேட்புப் பட்டியல் விதிகளுக்கு முரணாகவும் உள்நோக்கத்துடனும் தணிக்கை தடைபோடுவதை கைவிட்டு உடனடியாக ஏற்று பணப்பலனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT