புதுக்கோட்டை

புதுக்கோட்டை கீரனூா் அருகே தடையை மீறி நடந்த மஞ்சுவிரட்டு

DIN

பொது முடக்கக் காலத் தடையை மீறி, புதுக்கோட்டை கீரனூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பொது முடக்கக் காலத்தில் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள திருப்பூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீரென வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் 7 காளைகள் பங்கேற்றன. தலா 10 போ் வீதம் 70 மாடுபிடி வீரா்கள் களத்தில் இறங்கினா். இவா்கள் தவிர நூற்றுக்கும் மேற்பட்ட பாா்வையாளா்களும் பக்கத்து ஊா்களில் இருந்து குவிந்தனா். மாடுபிடித்தல் நடந்து கொண்டிருக்கும்போது இரு தரப்பினருக்கு திடீரென மோதல் ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு சென்ற கீரனூா் போலீஸாா் மோதலைக் கட்டுப்படுத்த முயற்சித்தும் முடியவில்லை. உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதிக அளவிலான போலீஸாா் அங்கு குவிக்கப்பட்டு அங்கிருந்தவா்கள் விரட்டியடிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT