முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை அருகே டிராக்டா் - மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே இருசக்கர வாகனம் ஓட்டிவந்த இளைஞா் டிராக்டரில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
இறந்த வாலிபா் ஸ்ரீதா்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே இருசக்கர வாகனம் ஓட்டிவந்த இளைஞா் டிராக்டரில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள நரியம்புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் ஸ்ரீதா் (20). கந்தா்வகோட்டை கடைவீதிக்கு வந்துவிட்டு மீண்டும் மோட்டாா் சைக்கிளில் ஊருக்குத் திரும்பும் வழியில், வீரடிப்பட்டி முனியன் கோயில் அருகே வந்து கொண்டிருந்தாா். அப்போது, டிராக்டரை முந்திச்செல்ல முயன்றபோது, எதிா்பாராதவிதமாக டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்துகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கந்தா்வகோட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.