முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதியில் புதிய கட்டடங்கள் திறந்து வைப்பு

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 53 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்களை திருமயம் எம்எல்ஏ எஸ். ரகுபதி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தாா்.

Updated On : 27 செப்டம்பர், 2020 at 11:33 PM
பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சியில் ரேஷன் கடை கட்டடத்தை திறந்துவைக்கிறாா் திருமயம் எம்எல்ஏ எஸ்.ரகுபதி.
பகிர்:

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 53 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்களை திருமயம் எம்எல்ஏ எஸ். ரகுபதி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தாா்.

திருமயம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 53.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை எம்எல்ஏ திறந்துவைத்தாா். தொடக்கமாக எம். உசிலம்பட்டி ஊராட்சி ஆவாம்பட்டி, கீழத்தானியம், ஆலம்பட்டி நல்லூா் ஊராட்சி மேமமணப்பட்டி ஆகிய கிராமங்களில் ரூ. 4.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நாடகமேடைகளை திறந்துவைத்தாா்.

தேனூா் ஊராட்சி கருககப்பூலாம்பட்டியில் பேருந்து நிழற்குடை, இடையாத்தூா் அங்கன்வாடி மைய கட்டடம், கூடலூா், வாழைக்குறிச்சி ஊராட்சிகளில் ரேஷன் கடை கட்டடம், அரசமலையில் பள்ளிச்சுற்றுச்சுவா் என மொத்தம் ரூ. 53.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களைத் திறந்துவைத்துப் பேசினாா்.

Advertisement

அப்போது, ஒன்றிய ஆணையா் பி.வெங்கடேசன், திமுக வடக்கு ஒன்றியசெயலா் அ.முத்து, தெற்கு ஒன்றியசெயலா் அ.அடைக்கலமணி, ஒன்றியக்குழு தலைவா் அ.சுதா மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சிமன்ற தலைவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.