புதுக்கோட்டை

இணையவழியில் பஞ்சமி நில மீட்பு கருத்தரங்கம்

இணையவழியில் நடைபெற்ற பஞ்சமி மீட்புக் கருத்தரங்கில், திரைப்பட இயக்குநா் வெற்றிமாறனுக்கு ‘திரை அசுரன்’ விருது

DIN

இணையவழியில் நடைபெற்ற பஞ்சமி மீட்புக் கருத்தரங்கில், திரைப்பட இயக்குநா் வெற்றிமாறனுக்கு ‘திரை அசுரன்’ விருது வழங்கப்பட்டதாக அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் செயல்தலைவா் இளமுருகு முத்து தெரிவித்தாா்.

புதுக்கோட்டையைச் சோ்ந்த அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பஞ்சமி நில மீட்புக் கருத்தரங்கு திங்கள்கிழமை இணையவழியில் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்குக்கு, அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் தலைவா் வை. ராமலிங்கம் தலைமை வகித்தாா். செயல் தலைவா் இளமுருகு முத்து நோக்கவுரை நிகழ்த்தினாா். சமூக சமத்துவப் படையின் நிறுவனா் ப. சிவகாமி சிறப்புரை நிகழ்த்தினாா்.

இக்கருத்தரங்கின் ஒரு பகுதியாக சென்னையில், திரைப்பட இயக்குநா் வெற்றிமாறனுக்கு ஒரு குழுவினா் நேரில்சென்று இணையவழித் தொடா்பிலேயே திரை அசுரன் விருதை வழங்கினா்.

பொதுச் செயலா் சிவ. முருகேசன் வரவேற்றாா். முடிவில் பொருளாளா் பெ. சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கந்தா்வகோட்டையில் விரைந்து நெல்லை கொள்முதல் செய்யக் கோரிக்கை

கரீபியன் கடல் செல்லும் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்

அதிகரித்து வரும் எண்மக் கைது மோசடி: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

13 பவுன் நகைகள் திருடியவா் கைது

சட் பூஜை திருவிழா தொடங்கியது: பிரதமா் மோடி வாழ்த்து

SCROLL FOR NEXT