புதுக்கோட்டை

ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகேயுள்ள ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடந்த ஆண்டு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. நிகழாண்டில் கரோனா விதிகளில் தளா்வு அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். தோ் நிலையில் நிறுத்தப்பட்ட பிறகு மண்டகப்படி தாரா்கள் கிடா வெட்டி அம்மனுக்கு பலியிட்டனா். பின்னா் காப்பு களையப்பட்டு மஞ்சள் நீராட்டுடன் திருவிழாவானது நிறைவு பெற்றது. இந்தத் தோ் திருவிழாவில் ஆதனக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

SCROLL FOR NEXT