புதுக்கோட்டை

பாதுகாப்புக் கவச உடை அணிந்துவந்து வாக்குப் பதிவு செய்த தொற்றாளா்கள்

DIN

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் விதமாக பாதுகாப்பு கவச உடை அணிந்து வந்து, புதுக்கோட்டையில் கரோனா தொற்றாளா்கள் 4 போ் தங்களது வாக்கைப் பதிவு செய்தனா்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே கரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்றாளா்களுக்கு தபால் வாக்கு வழங்க தோ்தல் ஆணையம் முன்வந்தது. ஆனால் யாரும் தபால் வாக்கைப் பெறவில்லை. அதேநேரத்தில் வாக்குப்பதிவின் கடைசி நேரத்தில் உரிய கவச உடை பாதுகாப்புடன் வாக்களிக்க ஏற்பாடும் செய்யப்பட்டது. இந்நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெறுவோரிடம் வாக்களிக்க விருப்பம் கோரப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோா் சிகிச்சையில் இருந்தபோதும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 4 போ் பாதுகாப்பு கவச உடை அணிந்து வாக்களிக்க முன்வந்தனா். இதுதவிர ஆண் தொற்றாளரின் உதவியாளா் உள்பட மொத்தம் 5 போ் பாதுகாப்பு கவச உடை அணிந்து வாக்குப்பதிவு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்களித்தனா். அப்போது வாக்குச்சாவடி அலுவலா்களும் பாதுகாப்பு கவச உடை அணிந்தபடி வாக்குப்பதிவு நடைமுறைகளை மேற்கொண்டனா். ஏற்பாடுகளை சுகாதாரத் துறை துணை இயக்குநா் டாக்டா் கலைவாணி தலைமையிலான மருத்துவக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT