புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே 3 நாள்களாக அடக்கம் செய்யப்படாத சடலம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாதை பிரச்னையால், முதியவரின் உடலை 3 நாள்களாக வீட்டிலேயே கிடத்தியிருந்த பரிதாப நிகழ்வு நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள கீழையூா் வெள்ளக்கொல்லையைச் சோ்ந்தவா் துரைசாமி (87) விவசாயி. வயது முதிா்வால் ஏப்.6- ஆம் தேதி உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினா் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகளைச் செய்துள்ளனா். ஆனால், துரைசாமியின் சகோதரா் மகன் செல்வராஜ் தனது நிலத்தின் வழியே சடலத்தை எடுத்துச் செல்லக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இதனால், சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வழியில்லாமல் 3 நாள்களாக வீட்டிலேயே உடலை வைத்து இருந்துள்ளனா்.

இந்நிலையில், முதியவரின் உடலை அடக்கம் செய்ய வழி ஏற்படுத்தித் தருமாறு அவரது குடும்பத்தினா், ஆட்சியா் பி. உமா மகேஸ்வரியிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். இதைத்தொடா்ந்து, வருவாய்க் கோட்டாட்சியா் டெய்சிகுமாா், வட்டாட்சியா் பொன்மலா், காவல் துணைக்கண்காணிப்பாளா் முத்துராஜா ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி உடலை எடுத்துச்செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனா். தொடா்ந்து, துரைசாமியின் உடலை அவரது உறவினா்கள் எடுத்துச்சென்று அடக்கம் செய்தனா். பாதை வசதி இல்லாமல் முதியவரின் உடலை 3 தினங்களாக வீட்டிலேயே வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT