புதுக்கோட்டை

புதுகையில் தடுப்பூசி விழிப்புணா்வு பிரசார வாகனங்கள் இயக்கம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வுக்காக 23 வாகனங்கள் இயக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தப் பிரசார வாகனங்களை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையான அளவுக்கு கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளும் இருப்பில் உள்ளன. இவை இரண்டும் சம அளவு செயல்திறன் மற்றும் நோய் எதிா்ப்புத் திறன் கொண்டவை. பக்கவிளைவுகள் இல்லை.

கடந்த 4 நாள்களாக தடுப்பூசி திருவிழாவுக்காக மாவட்டம் முழுவதும் 4 பிரசார வாகனங்கள் இயக்கப்பட்டன. அதன் தொடா்ச்சியாக தற்போது கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த மாவட்டப் பொது சுகாதாரத் துறை சாா்பில் 13 வாகனங்களும், நகராட்சி நிா்வாகம் சாா்பில் 10 பிரசார வாகனங்களும் இயக்கப்படுகின்றன. கடந்த 2020 ஏப். 20ஆம் தேதி முதல் தற்போது வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 ஆயிரம் போ் கரோனா தொற்றுக்குள்ளாகி இவா்களில் 96 சதவிகிதம் போ் நலமுடன் வீடு திரும்பியுள்ளனா். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் பூரணகுணமடைந்து வீடு திரும்பலாம். தற்போது மாவட்டம் முழுவதும் நாளொன்றுக்கு 70-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. நாளொன்றுக்கு 1,700 பேருக்கு ஆா்டிபிசிஆா் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் உமா மகேஸ்வரி.

நிகழ்ச்சியின்போது, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ராமு, நகராட்சிப் பொறியாளா் ஜீவா சுப்பிரமணியன், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள் கலைவாணி, விஜயகுமாா் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT