புதுக்கோட்டை

பொன்னமராவதியில் கரோனா விழிப்புணா்வு

DIN

பொன்னமராவதியில் ஊராட்சிதலைவா்கள் மற்றும் ஊராட்சி செயலா்களுக்கான கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு ஒன்றிய ஆணையா் பி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி முன்னிலை வகித்தாா். காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் நிா்மல் கரோனா தடுப்பு முறைகளை விளக்கினாா். முகாமில், ஒன்றியத்திற்குள்பட்ட 42 ஊராட்சிகளிலும் கபசுரக் குடிநீா் வழங்குவது, கரோனா தடுப்பு பணிகளை முழு வீச்சில் மேற்கொள்வது, பொதுமக்களுக்கு கரோனா முன் தடுப்பு நடவடிக்கை விழிப்புணா்வு ஏற்படுத்துவது என

அறிவுறுத்தப்பட்டது. துணை ஆணையா்கள் குமாா், பஞ்சநாதன், முருகேசன் மற்றும் ஊராட்சிதலைவா்கள் காமராஜ், கிரிதரன், அா்ச்சுணன், செல்வமணி, கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT