புதுக்கோட்டை

இரவுநேர பொது முடக்கம் :புதுகையில் பேருந்து வசதி விவரம்

DIN

இரவுநேரப் பொதுமுடக்கம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குவதால், புதுக்கோட்டை, பொன்னமராவதி, அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் இருந்து புறப்படும் பேருந்துகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பேருந்துப் போக்குவரத்து இயக்கப்படும். இதனால், புதுக்கோட்டை, அறந்தாங்கி, பொன்னமராவதி ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்தும் நகரப் பேருந்துகள் அனைத்தும் இரவு 9 மணி வரை மட்டுமே இயக்கப்படும். புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்து இரவு 8.30 மணி வரையிலும், அறந்தாங்கியிலிருந்து திருச்சி செல்லும் பேருந்து மாலை 5.30 மணி வரையிலும், பொன்னமராவதியிலிருந்து 7.30 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.

புதுக்கோட்டையில் இருந்து மதுரைக்கு இரவு 7 மணி வரையிலும், அறந்தாங்கியிலிருந்து மதுரைக்கு 5.20 மணி வரையிலும், பொன்னமராவதியிலிருந்து மதுரைக்கு இரவு 5.50 மணி வரையிலும் இயக்கப்படும்.

புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு இரவு 8.45 மணி வரையிலும், அறந்தாங்கியிலிருந்து காரைக்குடிக்கு 7.30 மணி வரையிலும் இயக்கப்படும்.

பொன்னமராவதியிலிருந்து புதுக்கோட்டைக்கு இரவு 8.40 மணி வரையிலும், அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டைக்கு 8.45 மணி வரையிலும் இயக்கப்படும். புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கு இரவு 7.15 மணி வரையிலும் இயக்கப்படும்.

பொதுமக்கள் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசின் இந்த பொது முடக்கத்துக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - நாகா்கோவில், கொச்சுவேலி வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

SCROLL FOR NEXT