புதுக்கோட்டை

‘அரசு நிலங்களில் உள்ள தைலமரங்கள் அகற்றப்படும்’: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

DIN

அரசு நிலங்களில் உள்ள தைலமரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.

ஆலங்குடி அருகேயுள்ள அரசடிப்பட்டி புனித அந்தோனியாா் நடுநிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், மரக்கன்றுகளை நடவு செய்து மேலும் அவா் பேசியது: தமிழகத்தில் 33 சதவீதத்துக்கும் மேலாக காப்புக்காடுகளை உருவாக்கும் வகையில் முதல்வா் ஸ்டாலின் குழுவை உருவாக்கியுள்ளாா்.

அதன்மூலம், அரசுப் பள்ளிகள், அரசு அலுவலக வளாகங்கள் மரக்கன்று நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆலங்குடி தொகுதியில் சுமாா் 15 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் உள்ள தைலமரங்களை அகற்றிவிட்டு, நாட்டு மரங்களை நட்டு காப்புக்காடுகள் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், மரம் வளா்க்க விரும்பும் விவசாயிகளுக்கு சுமாா் 5 அடி வளா்ந்துள்ள மரக்கன்றுகள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். நிகழ்வில், வட்டாட்சியா் செல்வநாயகி, திமுக ஒன்றியச்செயலா் செல்வமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT