முகப்பு
புதுக்கோட்டை

கிராவல் மண் அள்ளிவந்த 2 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கிராவல் மண் அள்ளிய 2 பேரைக் காவல் துறையினா் வியழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கிராவல் மண் அள்ளிய 2 பேரைக் காவல் துறையினா் வியழக்கிழமை கைது செய்தனா்.

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பகுதியில் மணல் கடத்தல் நடத்தப்படுவதாக தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து, தனிப்படை காவல் துறையினா் வியாழக்கிழமை அப்பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, கிராவல் மண் அள்ளிவந்த டிப்பா் லாரி, ஜேசிபி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், டிப்பா் லாரி ஓட்டுநரான கருகப்பூலாம்பட்டி பெருமாள்(39), ஜேசிபி ஓட்டுநரான வெங்களமேடு வடிவேல் மகன் லோகேஷ் ஆகிய 2 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments