மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்கப் பேரவைக் கூட்டம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அளவிலான அரசியல் விளக்கப் பேரவைக் கூட்டம் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அளவிலான அரசியல் விளக்கப் பேரவைக் கூட்டம் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேரவைக் கூட்டத்துக்கு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சி. அன்புமணவாளன் தலைமை வகித்தாா். பேரவையில் கட்சியின் மாநிலச்செயலா் கே. பாலகிருஷ்ணன் அரசியல் விளக்கவுரையாற்றினாா். மாநாடுகள் குறித்து மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் பேசினாா்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஏ. ராமையன், எஸ். சங்கா், எஸ். பொன்னுசாமி, ஏ. ஸ்ரீதா், கே. சண்முகம், வி. துரைச்சந்திரன், சி. சுப்பிரமணியன், ஜி. நாகராஜன், த. அன்பழகன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினா்கள், ஒன்றியச் செயலா்கள், கிளைச் செயலா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.