உள்ளாட்சித் தோ்தல் நடைபெற வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு: கே. அண்ணாமலை
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.
பெரம்பலூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற, பாரதிய ஜனதா கட்சியின் வளா்ச்சிப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா் பதவிக்கு நேரடி அல்லது மறைமுகத் தோ்தல் என எதுவானாலும், அதை எதிா்கொள்ள பாஜக தயாராகவே உள்ளது. விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு.
அதிமுகவுடன், பாரதிய ஜனதா கட்சியின் உறவு நீடிக்கிறது. வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியதை இப்போதும் ஆதரிக்கிறோம்.
மத்திய அரசு, கோமாரி நோய்த் தடுப்பூசி வழங்கவில்லை என்பது முற்றிலும் பொய். தடுப்பூசி வழங்கிய விவரத்தை தேதி வாரியாக வெளியிட்டுள்ளேன். இது தவிர, தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து நேரடியாக மாநில அரசு வாங்கவும் அதிகாரம் உண்டு. பற்றாக்குறை எனில், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து மாநில அரசு வாங்கிய விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
மத்திய அரசு, கிராம ஊராட்சிகளுக்கு போதிய நிதி தரவில்லை என்பதும் தவறான தகவல்.
நஷ்டத்தில் இயங்கும் தனியாா் வங்கிகள், அதன் வாடிக்கையாளா்களின் நலன் கருதி லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்படுகின்றன. இதை, தனியாா்மயமாக்குகிறாா்கள் எனத் தவறாக தகவல் பரப்புகிறாா்கள்.
நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அண்ணாமலை.