புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை பகுதி உரக்கடைகள், கூட்டுறவுக் கடன் சங்கங்களில் ஆய்வு

DIN

கந்தா்வகோட்டை பகுதிகளிலுள்ள உரக்கடைகள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வட்டாட்சியா், வேளாண் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

பொட்டாஷ் உரத்தை இருப்பு வைத்து, அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் குளத்தூா் நாயக்கா்பட்டி, தெத்துவாசல்பட்டி, துவாா், வேலாடிப்பட்டி, கந்தா்வகோட்டை, விராலிப்பட்டி, வடுகப்பட்டி ஆகிய பகுதிகளிலுள்ள உரக்கடைகள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வட்டாட்சியா் புவியரசன், வேளாண் உதவி இயக்குநா் அன்பரசன் உள்ளிட்ட வேளாண் அலுவலா்கள், தோட்டக்கலை அலுவலா்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.

இருப்பிலுள்ள பொட்டாஷ் உரங்கள் ரூ.1,040 விலையிலும், புதிய உரங்கள் ரூ.1700-க்கும் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் புவியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

SCROLL FOR NEXT