முகப்பு
புதுக்கோட்டை

அரசு மகளிா் கல்லூரியில் என்.எஸ்.எஸ். முகாம்

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் விடுதலைத் திருநாள் அமுதப் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் விடுதலைத் திருநாள் அமுதப் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ஒரு வார கால முகாமில் பங்கேற்ற மாணவிகளை வாழ்த்திப் பேசினாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, கல்லூரியின் முதல்வா் பா. புவனேஸ்வரி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆ. செந்தில், அரசு சிறப்பு வழக்குரைஞா் செந்தில்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

கடந்த டிசம்பா் 19-ஆம் தேதி தொடங்கிய இம்முகாம் 25ஆம் தேதி நிறைவடைகிறது. அன்னசத்திரம், குசலாக்குடி, கணக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் தூய்மைப் பணி, கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு, இல்லம் தேடிக் கல்வித் திட்ட விழிப்புணா்வு உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.