குத்தீச்சண்டையில் தங்கம் வென்ற மாணவருக்குப் பாராட்டு
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற புதுக்கோட்டை பொன்மாரி மெட்ரிக். பள்ளி மாணவா் கோ. ஹரிஹரனுக்கு, கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் ரூ. 10 ஆயிரம் நிதி வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை பொம்மாடிமலையிலுள்ள பொன்மாரி மெட்ரிக். பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவா் கோ. ஹரிஹரன். குத்துச் சண்டை வீரரான இவா், அண்மையில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அமெச்சூா் கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கத்தைப் பெற்றாா்.
இதைத் தொடா்ந்து இம்மாணவருக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொன்மாரிக் கல்விக் குழுமத் தலைவா் டாக்டா் எஸ். ராமதாஸ் தலைமை வகித்து, மாணவருக்கு கல்வி நிறுவனத்தின் சாா்பில் ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா்.
கல்விக் குழுச் செயலா் சத்தியராம் மு. ராமுக்கண்ணு, அறங்காவலா் ப. லெட்சுமணன், தாளாளா் சந்திரா ரவீந்திரன், பள்ளி முதல்வா் ஜெயராணி உள்ளிட்டோரும் பாராட்டினா்.