முகப்பு
புதுக்கோட்டை

மத்தியக் கூட்டுறவு வங்கி சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சாா்பில், 3,992 பயனாளிகளுக்கு ரூ.15.02 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

 புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சாா்பில், 3,992 பயனாளிகளுக்கு ரூ.15.02 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செல்வி தலைமை வகித்தாா். தொடா்ந்து திருமயம் ஊராட்சி ஒன்றியம், கும்மங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு புதிய வகுப்பறை கட்டடங்களை அமைச்சா் ரகுபதி திறந்து வைத்தாா்.

நிகழ்வில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா , மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் மு. தனலெட்சுமி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் மா. உமாமகேஸ்வரி, வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) பிரேம்குமாா், அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.