இளைஞருக்கு கத்திக்குத்து: உறவினா்கள் சாலை மறியல்
ஆலங்குடி அருகே இளைஞருக்கு கத்திக்குத்து நேரிட்டதைத் தொடர்ந்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகே இளைஞருக்கு கத்திக்குத்து நேரிட்டதைத் தொடர்ந்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகே உள்ள கரும்பிரான் கோட்டையைச் சோ்ந்தவா் வெற்றிச்செல்வன்(37). ஆலங்குடி பள்ளிவாசல் தெரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சில இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அவா்களை வெற்றிச்செல்வன் தடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த அப்துல் ரகுமான்(27) வெற்றிச்செல்வனை கத்தியால் குத்தியுள்ளாா். இதில் வெற்றிச்செல்வனை அப்பகுதியினா் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
இதையடுத்து, ஆலங்குடி கடைவீதியில் திரண்ட வெற்றிச்செல்வன் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் அவ்வழியே வந்த பேருந்தின் கண்ணாடியை உடைத்தனா். தொடா்ந்து ஆலங்குடி போலீசாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களைக் கலைந்து போகச் செய்தனா். இந்நிலையில், அப்துல்ரகுமான் ஆற்றுப்பாலம் அருகே ரத்தக் காயங்களுடன் காவல் துறையினா் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.