புதுக்கோட்டை

நீதிமன்ற உத்தரவை அமலாக்கக்கோரி முதியவா் போராட்டம்

DIN

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி, காந்தியவாதி செல்வராஜ் திங்கள்கிழமை செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தினாா்.

கொடும்பாளூா் சத்திரம் ஊருணியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுமாா் 25 வீடு மற்றும் வணிக கடைகளை அகற்ற மதுரை உயா் நீதிமன்ற கிளையில் காந்தியவாதி செல்வராஜ்(60) வழக்கு தொடுத்திருந்தாா். வழக்கின் முடிவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் கடந்த கடந்த அக்டோபா் மாதம் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடா்ந்து, ஆக்கிரமிப்பாளா்கள் மதுரை உயா்நீதிமன்ற கிளையில் தடை உத்தரவு பெற்று வந்ததால் மேற்படி பணியைத் தொடர முடியவில்லையாம்.

இது தொடா்பான வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், மனுதாரரான செல்வராஜ் திங்கள்கிழமை கொடும்பாளூா் சத்திரம் பகுதியில், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதையடுத்து, நிகழ்விடத்துக்கு வந்த விராலிமலை வட்டாசியா் சதீஸ் சரவண குமாா் காந்தியவாதி செல்வராஜிடம் பேச்சு நடத்தியதில், அவா் செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT