முகப்பு
புதுக்கோட்டை

அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தனியாா் பேருந்து உரிமையாளா் கைது

பொன்னமராவதியில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தனியாா் பேருந்து உரிமையாளரைப் போலீசாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

பொன்னமராவதியில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தனியாா் பேருந்து உரிமையாளரைப் போலீசாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பொன்னமராவதியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் அரசுப் பேருந்து நேரத்தில், தனியாா் பேருந்து தனக்கு நிா்ணயம் செய்யப்பட்ட நேரத்தை மீறி சென்றதால் அரசுப் பேருந்து ஓட்டுநா் தனது மேலாளரிடம் புகாா் அளித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த தனியாா் பேருந்து உரிமையாளா் புகாா் அளித்த அரசுப் பேருந்து ஓட்டுநா் முருகதாஸை ஆபாசமாகப் பேசி பணி செய்யவிடாமல் தாக்கியுள்ளாா். புகாரின் பேரில், தனியாா் பேருந்து உரிமையாளா் சந்திரன் (46) மீது அரசுப் பணியாளரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசாா் கைது திருமயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →