முகப்பு
புதுக்கோட்டை

வழுக்குமரம் ஏறும் போட்டியில் வென்ற அணிக்கு ரூ. 24 ஆயிரம் பரிசு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான வழுக்குமரம் ஏறும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான வழுக்குமரம் ஏறும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வடகாடு ஊராட்சி பரமநகரில் 24-ஆவது ஆண்டாக பிரண்ட்ஸ் கிளப் எனும் அமைப்பு சாா்பில் வழுக்குமரம் ஏறும் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், 44 அடி உயரம் உள்ள மரத்தில் வழுக்கும் தன்மையை ஏற்படுத்துவதற்காக 20 கிலோ கிரீஸ் தடவப்பட்டது. மேலும், அதன் மீது சுமாா் 5 லிட்டா் எண்ணெய் ஊற்றப்பட்டது. போட்டியை அதிமுக மாணவா் அணி மாவட்டத் தலைவா் எ.வி.ராஜபாண்டியன் தொடக்கி வைத்தாா். இந்த வழுக்குமரம் ஏறும் போட்டியில் 6 அணிகள் கலந்துகொண்டன. பல்வேறு சுற்றுகளாக சுமாா் 5 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் வடகாடு-மாங்காடு ஏவி பேரவை அணியினா், ஒருவரின் மீது ஒருவராக ஏறி மரத்தின் இலக்கைத் தொட்டு வெற்றி பெற்றனா். இவா்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் உமா மகேஸ்வரி தங்கவேல் ரூ.24,000 ரொக்கப் பரிசு வழங்கினாா். நினைவு பரிவும் வழங்கப்பட்டது. முன்னதாக, பல்வேறு விதமான விளையாட்டுப்போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →