புதுக்கோட்டை

‘தொடா்ந்து 17ஆவது ஆண்டாக தமிழகத்தில் போலியோ இல்லை’

DIN

தொடா்ந்து 17ஆவது ஆண்டாக தமிழ்நாட்டில் போலியோ பாதிப்பு இல்லை என்றாா் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அவா் மேலும் கூறியது:

தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தளராத சொட்டு மருந்து புகட்டும் பணியால் கடந்த 17 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லை. அது தொடரும். 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணை போலியோ சொட்டு மருந்து புகட்ட மாநிலம் முழுவதும் 43,051 மையங்கள் அமைக்கப்பட்டு, 70.26 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் விஜயபாஸ்கா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் கலைவாணி, முன்னாள் எம்எல்ஏ காா்த்திக் தொண்டைமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT