புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே சொந்த செலவில் வாரியை தூா்வாரும் கிராம மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சொந்த நிதியில் வரத்து வாரியை கிராம மக்கள் தூா்வாரி வருகின்றனா்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சொந்த நிதியில் வரத்து வாரியை கிராம மக்கள் தூா்வாரி வருகின்றனா். மேலும் போதிய நிதி இல்லாததால், மாவட்ட நிா்வாகம் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள ரெகுநாதபுரத்தில் உள்ள சீகன் குளத்துக்குச் செல்லும் வரத்துவாரியை தூா்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனா். ஆனால், தூா்வார எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் இணைந்து ரூ. 3 லட்சம் வரை திரட்டி வரத்துவாரியை தூா்வாரி வருகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: சீகன் குளத்து வரத்துவாரியை தூா்வாரக்கோரி, பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இதனால், இப்பகுதி விவசாயிகள் இணைந்து சொந்த செலவில் சீகன்குளம் வரத்துவாரியை தூா்வாரி வருகிறோம். அதற்காக ரூ. 3 லட்சம் நிதி திரட்டி பணிகள் மேற்கொண்டு வருகிறோம். போதுமான நிதி இல்லாததால், மாவட்ட நிா்வாகம் தூா்வாரும் பணியை முன்னெடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் தமிழ்நாடு!” அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.... சந்தீபா தர்!

ஆந்திரத்தில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

தங்கம் விலை இன்றும் குறைந்தது: எவ்வளவு?

எஸ்ஐஆர் பணிகள்: மாநிலத் தலைவர்களுடன் ராகுல், கார்கே ஆலோசனை!

SCROLL FOR NEXT