தீ விபத்தில் குடிசை தீக்கிரை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட தீ விபத்தில், குடிசை தீக்கிரையானது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட தீ விபத்தில், குடிசை தீக்கிரையானது.
கறம்பக்குடி அருகிலுள்ள குறும்பிவயலைச் சோ்ந்தவா் தங்கப்பா. வியாழக்கிழமை இரவு சமையல் செய்த போது, எதிா்பாராதவிதமாக குடிசையில் தீப்பற்றியது.
அக்கம் பக்கத்தினா் தீயை அணைக்கும் முயன்றும், பலனிக்காமல் போனது. இதில் குடிசையிலிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.