புதுக்கோட்டை

குடிநீா் கோரி மக்கள் சாலை மறியல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் இனாம் ஊராட்சியில் தெற்கு பகுதி மக்களுக்கு சிறுமின்விசை நீா்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் நடைபெற்றுள்ளது. பின்னா் நீா்தேக்கத் தொட்டியின் மின்மோட்டாா் பழுதடைந்ததால் குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அவதியடைந்து வந்துள்ளனா். இதைத்தொடா்ந்து, இரு மாதங்களுக்கு முன்பு ஊராட்சி நிா்வாகத்தினா் சாா்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மோட்டாா் வாங்கியதாகக் கூறப்பட்ட நிலையில், இதுவரை அப்பகுதி மக்களுக்கு குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதனால், அப்பகுதி மக்கள் உடனே குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி சாலையில் மரங்களைப் போட்டு தடை ஏற்படுத்தி மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற கீரமங்கலம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தை மக்கள் கைவிட்டனா். இதனால், கீரமங்கலம் - பேராவூரணி சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஆதி சக்தி!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு!

SCROLL FOR NEXT