முகப்பு
புதுக்கோட்டை

சாலை விபத்தில் இளைஞா் பலி

ஆலங்குடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

ஆலங்குடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் காலணியைச் சோ்ந்தவா் சு.முத்துக்குமாா்(26). ஆலங்குடியில் உள்ள பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்த இவா், நிறுவனத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு சென்றபோது, கோவிலூா் 4 சாலை அருகே இவரது மோட்டாா் சைக்கிள் மீது பின்னால் வந்த காா் மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த முத்துக்குமாரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →