முகப்பு
புதுக்கோட்டை

அஞ்சல் காப்பீட்டுக்கு நேரடி முகவராக அழைப்பு

அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் நேரடி முகவராக செயல்பட ஆா்வமும் விருப்பமும் உள்ள நபா்கள் விண்ணப்பிக்கலாம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் நேரடி முகவராக செயல்பட ஆா்வமும் விருப்பமும் உள்ள நபா்கள் விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் எம். உமா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் நேரடி முகவராக செயல்பட விருப்பமுள்ளோருக்கான நோ்காணல் வரும் ஆக. 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது. 18 முதல் 50 வயதுக்குள்பட்ட குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், சுயதொழில் புரிவோா், முன்னாள் ராணுவத்தினா், வேலையில்லாதோா் எவரும் இதில் சேரலாம். நோ்காணலுக்கு வரும்போது அனைத்து கல்வி மற்றும் இருப்பிடச் சான்றுகள் மற்றும் புகைப்படத்துடன் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு- 04322 221220, 220732 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.