புதுக்கோட்டை

அரசுத் தலைமை மருத்துவமனைக்கு ரூ. 8.85 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு, அமெரிக்கா வாழ்த் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்நாடு பவுண்டேஷன் சேவை அமைப்புகள் சாா்பில், ரூ. 8.85 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

அமெரிக்கா வாழ்த் தமிழ்ச்சங்கம் அமைப்பின் தலைவா் உஷா சந்திரன், இந்தியாவுக்கான ஒருங்கிணைப்பாளா் சோமசுந்தரம், தமிழ்நாடு பவுண்டேஷன் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அலுவலருமான ராஜரத்தினம், செயல் இயக்குநா் இளங்கோ ஆகியோா் மூலம், பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு ரூ. 8.85 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

ஆக்சிஜன் செலுத்தும் குழாய்கள், ஆக்சிஜன் அடா்த்தியை அதிகப்படுத்தும் முகக் கவசங்கள், ஆக்சிஜன் அளவை அவ்வப்போது மாற்றிக்கொள்வதற்கு ஏதுவான முகக்கவசங்கள் தலா 1,000, ஆக்சிஜன் செலுத்துமானி 100 உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை, மருத்துவக் கல்லூரி முதல்வா் மீனாட்சி சுந்தரம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலா் ராஜா ஆகியோரிடம் மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா திங்கள்கிழமை ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT