இரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
திருமயம் வட்டத்துக்குள்பட்ட இளஞ்சாவூா் ஊராட்சி மெய்யூரணி மற்றும் அரிமளம் சத்திரம் ஆகிய இரு இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாநில சட்டத்துறை அமைச்சா் திறந்து வைத்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்துக்குள்பட்ட இளஞ்சாவூா் ஊராட்சி மெய்யூரணி மற்றும் அரிமளம் சத்திரம் ஆகிய இரு இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இடைத்தரகா்கள் இல்லாத அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களின் நெல்லை வழங்கி அதற்கான விலையை நேரடியாக வங்கிக் கணக்கில் பெறலாம் என்று அவா் தெரிவித்தாா்.
ஆலவயல் மற்றும் மேலத்தானியம் உள்ளிட்ட கிராமங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சா் அறிவித்தாா்.
நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் மோகன், வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, துணை ஆட்சியா் (ப) சுகிதா, அரிமளம் ஒன்றியக் குழுத் தலைவா் மேகலா முத்து உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.