கிராம நிா்வாக குழு கூட்டம்
பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் கிராம நிா்வாகக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் கிராம நிா்வாகக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கிராம மக்கள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் வாழ கிராம எல்லைப்பகுதியில் எந்த ஜாதி, மத அமைப்பின் சாா்பாகவும் விளம்பரப் பலகை மற்றும் கொடிகள் அமைக்கக் கூடாது. இதையடுத்து, ஊா்ப்பகுதியில் உள்ள அனைத்து சாதி, சங்கக் கொடிகள், விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன. இதன்மூலம் திருக்களம்பூா் ஜாதி, மத பேதமில்லாத கிராமமாக தன்னை முன்னிலை படுத்திக்கொண்டுள்ளது.