அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்பு
அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன் என்று பாஜ மாநில துணைத்தலைவரும், பிரபல நடிகையுமான குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.
அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன் என்று பாஜ மாநில துணைத்தலைவரும், பிரபல நடிகையுமான குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டியில், எனது கணவரான சுந்தர்.சி எனது அரசியல் வாழ்க்கையில் பின்புலமாக இருந்தவர். அவர் தற்போது நேரடி அரசியலில் களம் காண்கிறார். அவருக்கு என்னுடைய அறிவுரை தேவையில்லை. தேர்தல் களத்தில் போட்டி இருக்க வேண்டியது அவசியம். வெற்றி சுலபமாக கிடைத்தால் அதனை ரசிக்க முடியாது.
மக்கள் நல்லது செய்பவர்களுக்கு தான் ஆதரவாக இருப்பார்கள். பாரம்பரிய அரசியல்வாதி என்பதற்காகவும், குடும்ப அரசியல்வாதி என்பதற்காகவும் மக்கள் வாக்களிக்கும் காலம் போய்விட்டது. அண்ணாமலை போட்டியிடாதது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது, அது மேலிட உத்தரவு, அதுகுறித்து அவர்தான் பேசவேண்டும்.
Advertisement
தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் திமுக இடையில்தான் போட்டி. தம்பி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன். அவர் குறித்து மே 4 தேதிக்கு பிறகு பேசலாம். அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன். மத்திய தொகுதியில் நிறைவேற்றாத திட்டங்கள் பிரசனைகள் நிறைய உள்ளன. அனைத்திற்கும் தீர்வு காண்போம் எனக் கூறினார்.