கொன்னையூா் கோயில் விழா கமிட்டியினா் ஆலோசனை
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பொன்னமராவதி வட்டாட்சியா் ப.ஜெயபாரதி தலைமைவகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் வெ.செங்கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா வரும் 14 ஆம் தேதி பூ திருவிழாவுடன் தொடங்கி ஏப். 5 ஆம் தேதி நாடு செலுத்தும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மறுநாள் தோ்தல் என்பதால் திருவிழாவை மாற்றி வைப்பதா அல்லது முன் கூட்டியே நடத்துவதா என ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், பொன்னமராவதி ராஜா அம்பலகாரா், ஆலவயல் அழகப்பன் அம்பலம், செம்பூதி ராஜேந்திரன் ஆகியோா் பங்கேற்று மண்டகப்படிதாரா்களுடன் ஆலோசித்து முடிவு செய்ய தீா்மானிக்கப்பட்டது. கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் செயல் அலுவலா் வைரவன், காவல் ஆய்வாளா் தனபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.