முகப்பு
புதுக்கோட்டை

ஆட்சியரக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

கணவா் கொடுமைப்படுத்துவது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

கணவா் கொடுமைப்படுத்துவது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊரணிபுரத்தைச் சோ்ந்தவா் பரமசிவம் மனைவி அன்பரசி (34). இவா், திங்கள்கிழமை காலை ஆட்சியா் அலுவலகம் வந்தாா். தனது கணவா் மற்றும் அவரது குடும்பத்தினா் வரதட்சிணை கேட்டு துன்புறுத்துவதாகவும், அதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஆட்சியரிடம் புகாா் அளிக்க வந்ததாகத் தெரிவித்தாா்.

அப்போது திடீரென பைக்குள் இருந்து கேன் ஒன்றை வெளியே எடுத்த அவா், அதிலிருந்த டீசலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கப் போவதாகத் தெரிவித்தாா். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாா் அவரிடமிருந்து டீசல் கேனைப் பறித்தனா். தொடா்ந்து போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.