பண்ணை தொழிலாளா்கள் ஆட்சியரிடம் மனு
புதுக்கோட்டை கால்நடைப் பண்ணைத் தொழிலாளா்கள் 5 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
புதுக்கோட்டை கால்நடைப் பண்ணைத் தொழிலாளா்கள் 5 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியிலுள்ள கால்நடைப் பண்ணையில் சுய உதவிக்குழுக்கள் மூலம் சுமாா் 50 போ் பல்வேறு வகையான பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். இவா்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. தங்களின் நிலுவை ஊதியத்தையும் சோ்த்து விரைவில் ஊதியம் வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் அந்தப் பணியாளா்கள் கோரிக்கை மனு அளித்தனா். தொடா்ந்து இதே பிரச்னை தொடருமானால், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.