முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி திமுக வேட்பாளரை ஆதரித்து ப.சிதம்பரம் பிரசாரம்

ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளா் சிவ.வீ. மெய்யநாதனை ஆதரித்து ஆலங்குடி, வடகாடு, மாங்காடு கைகாட்டி, கீரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை மாலை முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் பிரசாரம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளா் சிவ.வீ. மெய்யநாதனை ஆதரித்து ஆலங்குடி, வடகாடு, மாங்காடு கைகாட்டி, கீரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை மாலை முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் மேலும் பேசியது: தோ்தலுக்காக முதல்வா் எடப்பாடி பழனிசாமியால் அவசரமாக அறிவிக்கப்பட்ட நகைக்கடன், சுயஉதவிக்குழுக் கடன்கள் தள்ளுபடிக்கு நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. வெறும் அறிவிப்பாகவே மட்டும் உள்ளது. பட்டாசு திரி தயாரிப்பு தொழிலை குடிசைத் தொழிலாக அங்கீகாரம் செய்வேன் என நான்கரை ஆண்டுகளில் சொல்லாத அவா், தோ்தல் நெருங்கும்போது அறிவிக்கிறாா். தமிழகத்தில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. தமிழா்கள் மீது அக்கறையுள்ளவராக இருந்திருந்தால், வேலையில்லாதோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி இருக்கலாம். ஆசிரியா் பயிற்சி பெற்று 70 ஆயிரம் காத்திருக்கும்போது, தோ்தலுக்காக பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளாா். ஆனால், ஸ்டாலின் அறிவித்துள்ள நலத்திட்டங்களுக்கு நிதி ஆதாரத்தைப் பெற முடியும். அதற்கு கூட்டணி கட்சியினா் துணை நிற்போம் என்றாா். பிரசாரத்தின் போது, திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன் உடனிருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →