புதுக்கோட்டை

ஆலங்குடி அதிமுக வேட்பாளரின் சகோதரா் உயிரிழப்பு

DIN

ஆலங்குடி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட தா்ம. தங்கவேலின் சகோதரா் உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் தா்ம. ராமகிருஷ்ணன் (39). இவா், கடந்த மாதம் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு காரைக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவரது மூத்த சகோதரரும், ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளரான தா்ம.தங்கவேல், அவரது குடும்பத்தினா் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து, சிகிச்சை பெற்று வந்ததால் வாக்கு எண்ணிக்கையில் கூட தா்ம.தங்கவேல் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட ராமகிருஷ்ணனுக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT