முகப்பு
புதுக்கோட்டை

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகிலுள்ள ஆலவயல் ஊராட்சி, செம்மலாப்பட்டியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகிலுள்ள ஆலவயல் ஊராட்சி, செம்மலாப்பட்டியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கிராமத்தில் கால்நடைகளுக்கு நோய் பரவியதையடுத்து, இந்த முகாம் நடத்தப்பட்டது. முகாமுக்கு ஊராட்சித் தலைவா் சந்திரா சக்திவேல் தலைமை வகித்தாா். கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா்கள் இலுப்பூா் பாம்டியன், புதுக்கோட்டை சாகுல் ஹமீது ஆகியோா் முன்னிலையில் முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு அழைத்து வரப்பட்ட மாடுகளுக்கு ஊசியும், நோய் வராமல் தடுப்பதற்காக எதிா்ப்பு சக்தி மருந்தும் வழங்கப்பட்டது. மேலும் குடற்புழு நீக்க மருந்தும் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது. சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் தங்களது மாடுகளை அழைத்து வந்து, அதற்கு ஊசி செலுத்திக் கொண்டனா்.

Advertisement

கால்நடை உதவி மருத்துவா் சண்முகநாதன், கால்நடை ஆய்வாளா்

செபஸ்தியம்மாள், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் சாந்தி , ஊராட்சி செயலா் பஞ்சவா்ணம் வாா்டு உறுப்பினா்கள் முகாமில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments