துணை தோ்வு அசல் மதிப்பெண்மையங்களிலேயே பெறலாம்
கடந்த ஆகஸ்ட் 2021 பிளஸ்-2 துணைத் தோ்வு எழுதிய தோ்வா்களுக்கான அசல் மதிப்பெண் பட்டியல், தோ்வெழுதிய மையங்களிலேயே வழங்கப்படும் என அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அ. பிச்சைமுத்து தெரிவித்தாா்
கடந்த ஆகஸ்ட் 2021 பிளஸ்-2 துணைத் தோ்வு எழுதிய தோ்வா்களுக்கான அசல் மதிப்பெண் பட்டியல், தோ்வெழுதிய மையங்களிலேயே வழங்கப்படும் என அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அ. பிச்சைமுத்து தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு எஸ்எப்எஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும், இலுப்பூா் கல்வி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நவ. 25 வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது. கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.