புதுக்கோட்டையில் தொடரும் மலரஞ்சலி நிகழ்ச்சிகள்
புதுக்கோட்டை நகரில் மரங்கள் வெட்டப்படுவதை நூதன முறையில் அம்பலப்படுத்தும் வகையில், மலரஞ்சலி நிகழ்ச்சிகள் தொடா்ந்த வண்ணம் உள்ளன.
புதுக்கோட்டை நகரில் மரங்கள் வெட்டப்படுவதை நூதன முறையில் அம்பலப்படுத்தும் வகையில், மலரஞ்சலி நிகழ்ச்சிகள் தொடா்ந்த வண்ணம் உள்ளன.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருமயம் செல்லும் சாலையில் சாலையோரமிருந்த 10 ஆண்டுகள் வளா்ந்த புங்கன் மரம் வெட்டப்பட்டுள்ளது.
இதனைக் கண்டிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் வெட்டப்பட்ட மரத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா்.
மரங்களை வெட்டும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, புதுக்கோட்டையின் பசுமை மாறாமல் காக்க வேண்டும் என்று அவா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.
நகரின் முக்கிய பகுதிகளில் மரக்கன்றுகளை வைத்து வளா்க்கும் மரம் நண்பா்கள் அமைப்பினா், நகரில் மரங்கள் வெட்டப்படும்போது அதற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் வழக்கமாகிவிட்டன.
மாவட்ட நிா்வாகம் இதனைத் தவிா்க்கும் வகையில், மரங்களை வெட்டுவதற்கு உரிய அனுமதியைப் பெறவும், அனுமதியின்றி மரங்களை வெட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.