சவூதி அரேபியாவில் உயிரிழந்தவரின் உடலை சொந்த ஊா் கொண்டு வர கோரிக்கை
சவூதி அரேபியாவில் உயிரிழந்த ஓட்டுநரின் உடலைக் கொண்டு வர, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
சவூதி அரேபியாவில் உயிரிழந்த ஓட்டுநரின் உடலைக் கொண்டு வர, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், காரையூா் அருகிலுள்ள எம்.உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் பொ. ஆனந்தன் (30). இவருக்கு மனைவி இளஞ்சியம், மகள் பாண்டிச்செல்வி (9), மகன் பாஸ்கா் (4) உள்ளனா்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுநா் பணிக்காக சவூதி அரேபியா சென்ற ஆனந்தன், கடந்த 7-ஆம் தேதி நேரிட்ட விபத்தில் உயிரிழந்தாா். ஆனால், இதுவரை அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படவில்லை.
Advertisement
எனவே, மத்திய அரசு சவூதி அரேபியாவிலுள்ள இந்திய தூதரகம் மூலமாக ஆனந்தனின் உடலை மீட்டு, சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவரது குடும்பத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.