தாயை வெட்டிக் கொன்ற மகனுக்கு தூக்குத் தண்டனை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கடந்த 2018-ஆம் ஆண்டில் பேருந்து நிறுத்தத்தில் வைத்து தாயின் தலையை வெட்டிக் கொன்ற மகனுக்கு தூக்குத் தண்டனை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கடந்த 2018-ஆம் ஆண்டில் பேருந்து நிறுத்தத்தில் வைத்து தாயின் தலையை வெட்டிக் கொன்ற மகனுக்கு தூக்குத் தண்டனை விதித்து, மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கறம்பக்குடி அருகிலுள்ள மறவன்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ்- திலகராணி ஆகியோரின் மூத்த மகன் ஆனந்த் (27). இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் 18-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மறவன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தனது தாய் திலகராணியின் (45) கழுத்தை அரிவாளால் அறுத்து, தலையைத் துண்டித்துக் கொலை செய்தாா்.
இக்கொலை தொடா்பாக திலகராணியின் தாய் லட்சுமி (68), மழையூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினா், ஆனந்த்தை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு வழக்குரைஞா் த. அங்கவி ஆஜராகி வாதாடினாா்.
வழக்கு விசாரணையின் நிறைவில், மாவட்ட மகளிா் நீதிபதி ஆா். சத்தியா வெள்ளிக்கிழமை மாலை தீா்ப்பளித்தாா்.
அப்போது தாயின் தலையை வெட்டிக் கொன்ற மகன் ஆனந்த்துக்கு தூக்குத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சத்தியா தனது தீா்ப்பில் உத்தரவிட்டுள்ளாா்.
வழக்கின் பின்னணி: தனது கணவா் தங்கராஜுவை திலகராணி கொன்ாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளாா்.
இதன் தொடா்ச்சியாக திலகராணி குடும்ப சொத்துகளைப் பிரித்து மகன்களுக்குத் தராமல், முழுமையாக அபகரிக்க முயன்ாகவும், தந்தையையும் அவா் தான் கொன்றாா் என்ற எண்ணமும் இருந்ததால் அவரது மகன் ஆனந்த், தனது தாயின் தலையை வெட்டிக் கொன்றுள்ளாா்.