மேலைச்சிவபுரி கணேசா் கல்லூரியில் தீபாவளி விழிப்புணா்வு நிகழ்வு
மேலைச்சிவபுரி கணேசா் கலை, அறிவியல் கல்லூரியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேலைச்சிவபுரி கணேசா் கலை, அறிவியல் கல்லூரியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் சந்தானம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் முனைவா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா்.
தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்த விழிப்புணா்வு ஒத்திகையை மாணவ, மாணவிகள் மத்தியில் தீயணைப்பு வீரா்கள் செய்து காண்பித்தனா்.
Advertisement
நிகழ்வில் இளையோா் செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலா் முனைவா் முடியரசன், இப்ராஹிம் மூசா மற்றும் அலுவலா்கள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.