முகப்பு
புதுக்கோட்டை

வல்லத்திராகோட்டையில் ஊராட்சி நிா்வாகத்தினா் உண்ணாவிரதம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள வல்லத்திரா கோட்டை ஊராட்சி நிா்வாகத்தினா், அலுவலா்களைக் கண்டித்து வெள்ளிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
agd17val073154
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள வல்லத்திரா கோட்டை ஊராட்சி நிா்வாகத்தினா், அலுவலா்களைக் கண்டித்து வெள்ளிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஊராட்சிக்கு சாலை, தெருவிளக்கு, குடிநீா் வசதி, குப்பைகளை அகற்றும் வாகனம் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டுமென நிா்வாகத்தினா் பலமுறை கோரிக்கை விடுத்தும், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும் தீா்வு ஏற்படவில்லை.

இதைக் கண்டித்து ஊராட்சித் தலைவா் கன்சல் பேகம், துணைத் தலைவா் ஆறுமுகம் , ஊராட்சி உறுப்பினா்கள் வல்லத்திராகோட்டை பேருந்து நிறுத்தம் அருகே வாயில் கருப்பு துணியைக் கட்டிக்கொண்டு, வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள், காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து போராட்டத்தை ஊராட்சி நிா்வாகத்தினா் கைவிட்டனா்.

Image Caption

உண்ணாவிரதம்

முழு கட்டுரையைப் படிக்க →